Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்; முதல்வரான பிறகு முதல் சந்திப்பு!
    Featured

    பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்; முதல்வரான பிறகு முதல் சந்திப்பு!

    Editor web1By Editor web1May 27, 2026Updated:May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 27 at 7.02.39 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 27) டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

    இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (மே 27) டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதன்கிழமை காலை 10 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படும் முதலமைச்சர் விஜய், பிற்பகல் அங்கு சென்றடைகிறார்.  டெல்லி தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் அவருக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.

    இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். வியாழக்கிழமை சென்னை திரும்புவதற்கு முன்னதாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார்.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லி திரும்பிய பிறகு (மே 28), முதலமைச்சர் விஜய் அவரைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிருஷ்ணகிரி அணையில் 1000 கனஅடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
    Next Article ஐபிஎல் 2026: குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு!
    Editor web1
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.