Close Menu
    What's Hot

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
    Featured

    பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

    Editor web1By Editor web1May 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Petr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் நாடு முழுவதும் மீண்டும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.33 காசுகள் உயர்ந்து ரூ.108.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 0.32 காசுகள் அதிகரித்து ரூ.99.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3.50 அதிரடியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த மே 15-ம் தேதி, பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 4 முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.7.50 வரை உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சர்வதேச விலைக்கு ஏற்ப விலையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்திருப்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் இறக்குமதி செலவை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு பெரும் இழப்பைச் சந்தித்து வருவதால், அந்தச் சுமையை ஈடுகட்டவே தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

    கடந்த பிப்ரவரி 28ம் தேதி  இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீதான தொடங்கிய போர் சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் செய்திகள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய சூழலில் விலை உயர்வு தொடர்வது பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் இன்று 2வது தகுதிச் சுற்று: ஐதராபாத்- ராஜஸ்தான் அணிகள் மோதல்!
    Next Article ஆந்திராவில் இருந்து கோவைக்கு 10 கிலோ கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது!
    Editor web1
    • Website

    Related Posts

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    July 22, 2026

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    July 22, 2026

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.