Close Menu
    What's Hot

    ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!

    40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு

    அடேங்கப்பா..!! அமெரிக்க போர் செலவு ரூ.3,700 கோடியா..!! செனட்டில் காரசார மோதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!
    தமிழ்நாடு

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    John Pandian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆலங்குளம் அருகே நெட்டூரில் திருமண விருந்தில் புகுந்து 6 பேரை வெட்டிய சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களைக் காவல்துறை வெளியிட மறுப்பது ஏன் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக (தமமுக) தலைவர் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    காவல்துறையின் அலட்சியமே காரணம்

    நெட்டூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து உள்ளூர் மக்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எந்தவொரு எளிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய கொடூரச் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவும்கூட ஊர்மக்கள் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் புகாரைப் பெற மறுத்துள்ளார்.

    இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு முழு முதற்காரணம் காவல்துறையின் அஜாக்கிரதை தான். முன்பே எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. காவல்துறையினர் எதிர்த்தரப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு, ஒருதலைப்பட்சமாகச் சமாதானம் பேசியதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகளா?

    இச்சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், கைதானவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையும் காவல்துறை முறைப்படி வெளியிடவில்லை. விவரங்களை ஏன் மறைக்கிறார்கள்? கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா என்ற பலத்த சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

    நெட்டூரில் அன்றைய தினம் காலையிலிருந்தே தகராறு நீடித்துள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் காவல்துறை ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை? சாதி வன்மத்தோடு மக்கள் மீது இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

    போராட்டம் வெடிக்கும்

    கடந்த 3 மாதங்களாகப் புகார்கள் வந்தும் நடவடிக்கை எடுக்காததைப் பார்க்கும்போது, தற்போதைய அரசுக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சில அதிகாரிகள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இனிமேலாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப் போலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

    தற்போது பொதுமக்களை நேரில் அழைத்துச் சென்று, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மீண்டும் புகார் அளிக்க உள்ளோம். இந்த புகாரின் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என ஜான் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!
    Next Article “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
    Editor web1
    • Website

    Related Posts

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    July 22, 2026

    தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: சிவகங்கை, தூத்துக்குடி எஸ்.பி.க்கள் இடமாற்றம்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!

    40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு

    அடேங்கப்பா..!! அமெரிக்க போர் செலவு ரூ.3,700 கோடியா..!! செனட்டில் காரசார மோதல்!

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.