Close Menu
    What's Hot

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்
    தமிழ்நாடு

    அமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026Updated:June 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 anand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டப்பணிகளை  ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முதலாவதாக, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பின்னர், வீடுகள் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சாலைகள் மற்றும் பாலங்கள், சிறுபாசன ஏரிகள், CSR Funding, SFC Grant பணிகள், சுய உதவிக் குழுக்கள் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    003 anand A

    அதனைத் தொடர்ந்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு முக்கியத் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.

    குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை ஆய்வு செய்தார். இந்தப் பண்ணையில் 10,000 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார்.

    003 anand C

    மேலும் கிராமப்புற எரிசக்தித் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், ரூபாய் 50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பயோ கேஸ் உற்பத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார்.

    பிறகு நெகிழிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூபாய் 7.82 லட்சம் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் முறைப்படுத்துதல் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

    003 anand B

    ஊராட்சியைத் தூய்மையாகப் பராமரிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப்பணிகளையும்  ஆய்வு செய்த அமைச்சர்,  ஆனந்த், “தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி, துரிதமாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும் என்றும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டப்பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கினார்.

    அமைச்சரின் இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர். எம். வீரப்பன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி நம்ம கொடி பறக்கட்டும்….  WELCOME அண்ணாமலை – ரஜினி ரசிகர்கள் அழைப்பு
    Next Article மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!
    Editor TN Talks

    Related Posts

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    June 4, 2026

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    June 4, 2026

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தொடரும் அதிர்ச்சி! திருச்சியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

    கோடை வெப்பத்திற்கு குட்பை!. கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.