Close Menu
    What's Hot

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்
    Featured

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 mks 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    இந்திரா காந்தி ஆட்சியின் அவசரநிலை குறித்து திமுகவின் முரசொலி இதழ் மவுனம் காப்பதன் மூலம் காங்கிரஸ் தவறுகளை திமுக மறைக்கிறதா என நயினார் நாகேந்திரன் ஐயம் எழுப்பியுள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜனநாயகத்தின் பேரிடராக விளங்கிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட இந்நாளில், வீர முழக்கமிட்டு எழ வேண்டிய ‘முரசொலி’ நாளேடு, அதுகுறித்த செய்திகளோ அல்லது எந்தவொரு சிறப்புக் கட்டுரையோ இன்றி மௌனம் காப்பது வியப்பளிப்பதாகக் கூறியுள்ளார்.

    நாட்டின் இருண்ட கால வரலாற்றையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் பேச மறுத்து, முரசொலி நாளிதழ் இன்று மௌனமாக இருப்பது ஏன்?

    மக்களாட்சியின் மாண்பைக் காக்கத் தங்களை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுகளை திமுக இவ்வளவு எளிதாகக் கடந்து போவது முறையா?

    கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து சென்ற பின்னரும், இதுகுறித்து திமுக இன்னும் மௌனம் காப்பது ஏன்?

    வரலாற்றின் கரும் பக்கங்களாக விளங்கும் காங்கிரஸின் தவறுகளை மறைக்க திமுக துணை போவதன் காரணம் என்ன? என அடுக்கடுக்காக வினா எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன்,  

    தியாகிகளின் குருதியால் எழுதப்பட்ட வரலாற்றை அலட்சியப்படுத்துவது தான் அவர்களுக்கு திமுக வழங்கும் மரியாதையா என்ற ஆதங்கம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய அலட்சியப்போக்கு அவசரநிலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தியாகிகளின் அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத்துவதாகவே அமைந்திருப்பதாகவும்,

    மேலும், அவசரநிலையின்போது தாம் ‘மிசா’ சிறைக்கொடுமைகளை அஞ்சாது எதிர்கொண்டதாகத் தொடர்ந்து முழங்கி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாதத்தை, இச்செயல் கேள்விக்குள்ளாக்கியுள்ளதோடு, அவரது சிறைவாசக் கூற்றுகளின் நம்பகத்தன்மையையே சிதைப்பதாகவும் அமைந்துள்ளது என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.

    congress DMK Nainar Nagendran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
    Next Article என்.எல்.சி. பங்குளை விற்க முதல்வர் விஜய் எதிர்ப்பு…பிரதமருக்கு கடிதம்!
    Editor TN Talks

    Related Posts

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    June 25, 2026

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    June 25, 2026

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.