Close Menu
    What's Hot

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி
    Featured

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 ss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக  ரூ 23 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் ஆதரவாளர் என்று கூறப்படும் இளஞ்செழியன் என்பவரை கைது செய்தனர் .

    அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் சிவகங்கரனுக்கு  மோசடியில் தொடர்பு உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து  மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கரனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    போலீசார் சம்மனை ஏற்று முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் இன்று காலை 10 மணியளவில் வேப்பேரியில் உள்ள சென்னை மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

     மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஞான சித்ரா தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் , அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கில்  இளஞ்செழியன் என்பவர் கைதாகி அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் விசாரணைக்கு ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இளஞ்செழியன் எனக்கு உதவியாளராக பணி புரியவில்லை என்றும் இளஞ்செழியனுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கரன் கூறினார்.

    கைதான இளஞ்செழியன் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாகவும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பல பேரை ஏமாற்றி ஏமாற்று பேர் வழியாக இருந்துள்ளார் .

    தன்னை காப்பாற்றி கொள்வதற்காக இதுபோன்று பொய்யான வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

    ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கூறும் உதவி பொறியாளர் வேலைக்கு டி என்பிசி மூலமாக தான் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்று பணத்தை பெற்றுகொண்டு ஏதும் செய்து விடமுடியாது.

    புகார் அளித்தவர் என்னுடன் அலைபேசியில் பேசியதாக கூறியுள்ளார்.  அப்படி பேசியிருந்தால் குரல் பரிசோதனை செய்யுங்கள் நான் அதற்கும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இளஞ்செழியன் கூறிய கருத்துக்களை நான் மறுக்கிறேன், அமைச்சராக இருந்த போது  ஒரு நாளைக்கு தினமும் 200 பேர் என்னை சந்திப்பார்கள். மனு கொடுப்பார்கள் அந்த கூட்டத்தில் நின்று  போய் இருக்கலாம், தலைமை செயலகத்தில் இது போன்று நடப்பதற்கு எப்படி சாத்தியம் ? என கேள்வி எழுப்பினார்.

    என்னிடம் பணம் கொடுத்தாக பொய்யான குற்றச்சாட்டு வைத்துள்ளார் , எனக்கும் இளஞ்செழியன் எந்தவித தொடர்பும் இல்லை அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று சிவசங்கரன் கூறினார்.

    மேலும் காவல்துறை வழக்கமான விசாரணை மேற்கொண்டனர், விசாரணை முழுவதும் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல் துறையினரிடம் மிக தெளிவாக கூறியிருக்கிறேன். எனக்கும் இளஞ்செழியனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர தயாராக இருப்பதாக கூறினார்..

    DMK Former DMK Minister Fraud Case Investigation Sivasankaran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு
    Next Article அன்வர் ராஜாவுக்கு எதிரான  வழக்கு: நீதிமன்றம் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    July 26, 2026

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    July 26, 2026

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.