Close Menu
    What's Hot

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ;  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ;  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 tet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்துவது தொடர்பான கோரிக்கையை எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வில் இரண்டாவது தாளில் தமிழ், ஆங்கிலம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பாடங்களுக்கு தலா 30 மதிப்பெண்களும், கணிதம், அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கே.சாந்தகுமார் உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு தொடர்பில்லாத கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்பதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பாடங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் நிர்ணயித்து தேர்வு நடத்தும் வகையில் அறிவிப்பாணையை திருத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு, தமிழ் பாடத்தில் கல்வித் தகுதியை பெற்றவர்தான் தமிழை பயிற்றுவிக்கிறார்; ஆங்கில பாடத்தில் கல்வித் தகுதியை பெற்றவர்தான் ஆங்கில பாடம் நடத்துகிறார்; ஆனால் இவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு எழுதிய நிரபந்திக்கப்படுகிறார்கள்; இது அவர்களுக்கு பாதாகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டார்.

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால், அடுத்த தேர்வில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அதற்கு ஏற்றபடி அறிவிப்பாணையை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Madras High Court Tamil Nadu government Teacher Recruitment Teacher Special Eligibility Test
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதே பழைய பெயர் பலகை; சட்டமன்ற அலுவலகத்தை திறந்த எஸ்.பி.வேலுமணி
    Next Article இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.