Close Menu
    What's Hot

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!
    Featured

    அரசு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பம்..! தீ வைத்து எரித்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு..!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramnad fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள சோழியக்குடி, காந்தி தெரு பகுதியை ம சேர்ந்தவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு, பாண்டிச்செல்வி என்ற மனைவியும், முவேதா (12-ஆம் வகுப்பு முடித்துள்ளார்), காவியாஸ்ரீ (10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்) ஆகிய இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில்  தொடந்து 20 வருடமாம குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

    ​கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், கூலித் தொழிலாளி நாகராஜனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய வீட்டின் வேலியை அரிவாளால் வெட்டி நாசப்படுத்திய வீடியோவும் வைரலாகி வருகிறது.  அவர், “இந்த இடத்தை காலி செய்யாவிட்டால் குடிசையைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    ​இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்களது குடிசை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், வீட்டில் இருந்த ஆதார் அட்டை ரேஷன் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடைகள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகின.

    ​இந்த விபத்து குறித்து, மிரட்டல் விடுத்த ராஜேந்திரன் மீது தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.

    ​இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காகத் தொண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசாரின் முன்னிலையிலேயே, குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரன் மீண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

    இந்த ராஜேந்திரன் அதிமுக பிரமுகராக இருந்து கொண்டு இப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்து வேலி பிடித்து வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது இதற்கு வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது

    ​அரசு புறம்போக்கு இடத்தில் நீண்ட நாட்களாகக் குடியிருந்து வரும் தங்களுக்குப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஏழை எளிய மக்களை மிரட்டி, வீட்டைத் தீ வைத்துக் கொளுத்திய நபர் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் தங்களுக்கு உரிய பாதுகாப்பும், எரிந்துபோன ஆவணங்களை மீண்டும் பெற்றுத் தரவும், குடியிருக்க வசதி செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    AIADMK functionary fire government land ramnad
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீரென தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டு மாடு!. கொடைக்கானலில் பரபரப்பு!
    Next Article எ.வ.வேலு வழக்கில் அதிரடி உத்தரவு: லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை
    Editor web3
    • Website

    Related Posts

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    July 9, 2026

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    July 9, 2026

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நீர் விவகாரம்: தவெக அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்

    காலதாமதமின்றி காவிரி நீர்; கர்நாடகாவுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    ஃபிஃபா2026 : “வெய்ன் ரூனி, நீங்க படகோட்டச் செல்லலாம்! ” – நார்வே வீரர் எர்லிங் ஹாலண்ட் காமெடி

    காவிரி நீரை மறுப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு… கர்நாடகாவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

    ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.