Close Menu
    What's Hot

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Featured

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம் நிறைவு: தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

    Editor web1By Editor web1July 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான 6 நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 11) இந்தியா புறப்பட்டார்.

    தனது பயணத்தின் தொடக்க நிகழ்வாக இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடி, அதிபர் பிரபோவோ சுபியான்டோவைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே கனிம வளங்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யோக்யகர்தாதவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பனன் கோயில் வளாகத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டது இரு நாட்டு கலாச்சார உறவுகளின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

    இந்தோனேஷியா பயணத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்ற  பிரதமர் மோடி, மெல்போர்னில் பிரதமர் அந்தோணி அல்பனீஸைச் சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்தது மற்றும் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

    தனது பயணத்தின் இறுதியாக நியூசிலாந்து சென்றார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். ஆக்லாந்தில் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், இரு நாட்டு உறவுகள் ‘மூலோபாய கூட்டாண்மையாக’ உயர்த்தப்பட்டன. 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்தவும், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டுச் செயல்பாடுகளுக்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது சமூக வலைதளத்தில், பிணைப்புகளை ஆழப்படுத்தி, கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, பகிரப்பட்ட எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு பயணம் என்று குறிப்பிட்டுள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இந்த மூன்று நாடுகளுடனும் இந்தியா புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கியுள்ளது.

    பயணத்தின் நிறைவாக, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், விமான நிலையத்திற்கே நேரில் வந்து பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார். பிரதமர் மோடியின் இந்த 6 நாள் பயணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவியட்நாம் சுற்றுலாப் படகு விபத்து: உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!
    Next Article ஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!
    Editor web1
    • Website

    Related Posts

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    July 11, 2026

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    July 11, 2026

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பல தலைமுறைகளின் இதயங்களை வென்றவர் எஸ்.ஜானகி!- முதலமைச்சர் விஜய் இரங்கல்

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.