தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணியை நியமித்து, அதற்குரிய உத்தரவை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணியை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினை தலைமைச் செயலகத்தில், லயோலா மணிக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் இருந்தார்.
அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயோலா மணி தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஆவார். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக திமுக ஆட்சியில் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
