சி.ஐ.டியூ அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
தமிழக அரசு தனது தொழில் கொள்கையைப் போல, தொழிலாளர்களுக்கான தனித்துவமான ‘தொழிலாளர் கொள்கையை’ வெளியிட வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 விழுக்காடு பங்களிப்பை வழங்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை அரசுத்துறைகளே அமல்படுத்த மறுக்கின்றன.
முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்தித்த போது, தமிழகத்தில் உள்ள ஒரு கோடி முறை சாரா தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்க உத்தரவிடக் கோரினோம். இதனால் மக்களின் பணப் புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் வளரும்.
ஆலைகளில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப் படுகின்றன. கூட்டுபேர உரிமை என்பதை கூட்டு பிச்சை எடுப்பதாக அரசு கருதக்கூடாது. ஊழலற்ற ஆட்சிக்கான முயற்சிகளுக்குத் துணை நிற்போம்; அதே நேரம் உரிமைகள் பறிக்கப்படும்போது போராடுவோம்.
அரசு உடனடியாகத் தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
