Close Menu
    What's Hot

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  – உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  – உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026Updated:July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 ponraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஆலோசகருமான பொன்ராஜ்-க்கு எதிராக, கடந்த மார்ச் 26ஆம் தேதி தற்போதைய அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், மே 12ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

    இந்த இரு வழக்குகளையும் ரத்து  செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை  நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.

    பொன்ராஜ் தரப்பில், யு டியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது அமைச்சர்களாக உள்ள இருவர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.

    காவல் துறை தரப்பில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவரின் செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு  ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதம் முன் வைக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இன்று, இந்த மனுக்கள் மீது தீர்ப்பளித்த நீதிபதி, பொன்ராஜ் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    High Court Madras High Court Petition Dismissed Political Analyst Ponraj Ponraj
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் மறுதேர்வு; விழுப்புரம் மாணவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை
    Next Article ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    July 17, 2026

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    July 17, 2026

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.