திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் திருப்பத்தூர் வனச் சரக அலுவலர் குமார் மற்றும் 10க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டினை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 கிலோ மதிப்பிலான இரண்டு செம்மரக் கட்டைகள் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை வனத்துறையினர் கைப்பற்றினர் மேலும் 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இரண்டு செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
