Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Editor web2By Editor web2July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tutucorin Firing
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசும் சிபிஐயும் பதிலளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்த கதிரேசன் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறை நடைமுறைகளை மீறி, சீருடை அணியாத துப்பாக்கிச் சுடும் வீரர்களை பயன்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படுத்தியதாகக் கூறி, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஒரே ஒரு காவல் ஆய்வாளர் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த ஆட்சேபனை மனு இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும், அருணா ஜெகதீசன் ஆணையம் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரைத்திருந்த நிலையில், இதுவரை ரூ.30 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும், வழக்கின் விசாரணையும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாகவும் வாதிடப்பட்டது.

    Madurai High court

    இதையடுத்து நீதிபதிகள், “எந்த உத்தரவும் இல்லாமல் ஒரு காவல் ஆய்வாளர் மட்டும் தனிப்பட்ட முறையில் துப்பாக்கியை எடுத்து 16 பேரை சுட்டாரா? இந்த வழக்கு ஏன் இவ்வளவு காலம் தாமதமாகிறது?” எனக் கேள்வி எழுப்பினர்.

    அத்துடன், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகள் என்ன, தனித்த விசாரணை அமைப்பிடம் வழக்கை ஒப்படைக்கும் திட்டம் உள்ளதா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க அரசு பரிசீலிக்கிறதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசும் சிபிஐயும் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    MaduraiHighCourt SterliteFiring tamilnadu thoothukudi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!
    Next Article திருச்சி : நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக போராட்டம்..! அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மை எ*ப்பு..!
    Editor web2
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.