Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்?- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் ஸ்ரீகாந்தி, முகுந்தன் பரசுராமன் சந்திப்பு!
    Featured

    தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்?- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் ஸ்ரீகாந்தி, முகுந்தன் பரசுராமன் சந்திப்பு!

    Editor web1By Editor web1July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 27
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திலும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்குவது மற்றும் பாமகவில் இருந்து விலகி அக்கட்சியில் இணைவது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் ஸ்ரீகாந்தி மற்றும் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதலும் ஏற்பட்டது. இதையடுத்த அரசியல் நகர்வாக, பாமகவின் ராமதாஸ் அணியின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட்டது. தந்தை ராமதாசை அன்புமணி குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதையடுத்து, இருவருகிகும் சுமூகமாக சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், பாமகவை இனி அன்புமணி பார்த்துக் கொள்வார் என்று ராமதாஸ் அறிவித்தார். இந்தச் சூழலில், பாமகவில் நிலவும் புதிய சூழல் காரணமாக, ஸ்ரீகாந்தி மற்றும் முகுந்தன் பரசுராமன் ஆகியோர் பாமகவில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே புதுச்சேரியில்  மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.  இந்தச் சந்திப்பின் போது, பாமகவிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைவது குறித்தும், புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கிளையைத் தொடங்கி விரிவாக்கம் செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவு சாதகமானது”- ஐயூஎம்எல் தலைவர் காதர் மைதீன் பேட்டி!
    Next Article மாணவர்களுக்கு வாழ்த்துகள்; பெருமை கொள்கிறோம்!- ராகுல் காந்தி!
    Editor web1
    • Website

    Related Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.