Close Menu
    What's Hot

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»’ஜல்லிக்கற்கள் அனுப்ப அனுமதிக்க வேண்டும்’ … முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்
    Featured

    ’ஜல்லிக்கற்கள் அனுப்ப அனுமதிக்க வேண்டும்’ … முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jelly stone
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான ஜல்லிக்கற்களை தமிழகத்திலிருந்து தடையின்றி கொண்டு செல்ல அனுமதி வழங்குமாறு, கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழக அரசு கடந்த ஜூலை 9-ஆம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான ஜல்லிக்கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போக்குவரத்துக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான தரமான ஜல்லிக்கற்கள் அங்கு போதுமான அளவில் கிடைக்காததால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்தே பெரும்பாலான கட்டுமானப் பொருட்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கட்டுப்பாடுகள் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றத்தை பாதித்து, திட்டங்கள் தாமதமடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் கொள்கையை மதிப்பதாகத் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்குத் தேவையான ஜல்லிக்கற்களை மட்டுமே கொண்டு செல்லும் வகையில் உரிய தளர்வு அல்லது சிறப்பு நடைமுறையை உருவாக்கி அனுமதி வழங்குமாறு முதலமைச்சர் விஜயை கேட்டுக்கொண்டுள்ளார்.

    InfrastructureDevelopment Kerala NationalHighway tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை…. தமிழகத்துக்கு எதிராக சதிவலை… அரசை எச்சரிக்கும் அன்புமணி!
    Next Article லடாக் எல்லையில் சீனா குவிக்கும் நவீன போர் விமானங்கள்.. பாதுகாப்பு வட்டாரங்கள் உஷார்!
    Editor web2
    • Website

    Related Posts

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

    July 28, 2026

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    July 28, 2026

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதிய சட்டம்… முதலமைச்சருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

    பழனி நில முறைகேடு!. அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இந்திராணிக்கு முன்ஜாமீன்!. உயர்நீதிமன்றம் அதிரடி!

    கேரளாவில் நீட் போராட்ட வழக்குகள்..!! முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜயன் கடிதம்..!!

    ஓயாத உக்ரைன்-ரஷியா போர்..!! 1,612வது நாளில் டிரம்ப் உடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு..!!

    சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.