Close Menu
    What's Hot

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்
    தமிழ்நாடு

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TNEB 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை வழங்கினர்.

    சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் சார்பில் மின்சார நிலைக்கட்டண உயர்வு, பழைய வாட்  வரி அபராதம், ஜி.எஸ்.டி. வரிச்சுமை, மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

    குறிப்பாக, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின்சார நிலைக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், 12 கிலோவாட்டிற்குக் குறைவான மின் இணைப்புகளை அரசாணையின்படி LT-3A-1 பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார். மேலும், 18 கிலோவாட்டிற்குக் குறைவான மின் இணைப்புகளுக்கு மீண்டும் பவர் பேக்டர் விலக்கை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    FOCIA

    புதிய தொழிற்பேட்டைகள் அமைத்தல், முதலீட்டு மானியத்தை விரைந்து வழங்குதல், பிணையமில்லா குறைந்த வட்டிக் கடன்கள் வழங்குதல், மூலப்பொருள் வங்கி அமைத்தல், அரசுத் துறை கொள்முதல்களில் உள்ளூர் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

    இந்த அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் கவனமாகக் கேட்டறிந்ததாகவும், குறு மற்றும் சிறு தொழில்களை பாதுகாக்கவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், கோரிக்கைகளை பரிசீலித்து சாதகமான முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததாக ஜேம்ஸ் தெரிவித்தார். 

    Coimbatore ElectricityCharges MSME tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!
    Next Article வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!
    Editor web2
    • Website

    Related Posts

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 29, 2026

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    July 29, 2026

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.