திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள பொங்குசனீஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி, கோவில்வாசலில் இருந்தவரின் உடுக்கையை வாங்கி இசைத்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூர்மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவிலுக்கு சனிக்கிழமையையொட்டி வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகைதந்தனர் ,
இதில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி கோவிலுக்கு வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோவில் வெளிப்பகுதியில் உடுக்கை அடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்தவர் முன் அமர்ந்து அவரைப் பாடச்செய்து, அதற்கேற்ப உடுக்கையை இசைத்தார் ,
அவரது எளிமையும், தன்னிச்சையான இசை நிகழ்வும் அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது ,
இதையடுத்து டிரம்ஸ் சிவமணியுடன் பக்தர்கள் பலர் செல்போனில் செல்ஃபி எடுத்து கொண்டனர் .
