Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அனைவரும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கதக்கது.. அதிமுக!!
    தமிழ்நாடு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அனைவரும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கதக்கது.. அதிமுக!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2025Updated:May 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது.

    அக்கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது.

    திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்க எங்களுக்கு மனம் இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுயவிவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் அல்லவா?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு,…

    — AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 13, 2025

    அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற எஃப்ஐஆரை லீக் செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு? எஃப்ஐஆர் அடிப்படையில் யார் அந்த சார்? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழுமையாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக?

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது? நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு? தெளிவாக சொல்கிறோம், எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு, இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு.

    இதையும் படிக்க: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: “இது தாமதமாகக் கிடைத்த நீதியே…” அன்புமணி ராமதாஸ்!!

    “ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல, அனுதாபி மட்டுமே” என்று முதல்வர் ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை. உங்களை போன்று எந்த சாரையும் காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை. திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும். 2026-ல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்ற கேள்விக்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும். அன்று திமுக தலைகுனிந்து நிற்கும், இது உறுதி.”

    AIADMK CBI politics Pollachi Probe Sexual Harassment Case Verdict Welcome அதிமுக சிபிஐ தீர்ப்பு பாலியல் வழக்கு பொள்ளாச்சி வரவேற்பு விசாரணை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: “இது தாமதமாகக் கிடைத்த நீதியே…” அன்புமணி ராமதாஸ்!!
    Next Article அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது.. முதலமைச்சர் ஸ்டாலின்!!
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.