Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் 10 இடங்களில் மழைக்கு வாய்ப்பு!!
    தமிழ்நாடு

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் 10 இடங்களில் மழைக்கு வாய்ப்பு!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பரப்புகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் தொடங்கிய கத்தரி வெயில், தற்போது சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியுள்ளது. கடந்த மே 16 முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வெப்ப நிலை சற்று குறைந்துள்ளது.

    இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை பொதுவாக மே 27-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சில நாட்கள் முன்னதாகவே – அதாவது மே 25-க்குள் தொடங்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இது கேரளா மாநிலத்தில் ஆரம்பித்து பின்னர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு பரவும் எனக் கூறப்பட்டுள்ளது.

    rain 1

    மேலும், மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.

    இந்த பருவமழையின் தொடக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில், குறிப்பாக நீலகிரி, வால்பாறை, கூடலூர், கோவை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், சுற்றுலா பயணிகள் அவதானமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    Arabian Sea Bay of Bengal Clouds Coastal Areas Coimbatore Cyclonic Circulation Districts Heavy Rain Kanyakumari Kerala Kodaikanal Lightning Low pressure area Meteorology Nilgiris Pradeep John Rain Southwest monsoon tamil nadu temperature Thunder Tourist Warning Valparai Weather Forecast அரபிக்கடல் இடி கடலோரப்பகுதி கனமழை கன்னியாகுமரி குறைந்த காற்றழுத்தம் கூடலூர் கேரளா கோவை சுற்றுலா எச்சரிக்கை தமிழ்நாடு தென்மேற்கு பருவமழை நீலகிரி பிரதீப் ஜான் மழை மாவட்டங்கள் மின்னல் மேகங்கள் வங்கக்கடல் வளிமண்டல சுழற்சி வால்பாறை வானிலை ஆய்வு வானிலை கணிப்பு வெப்பநிலை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடகத்திற்கு உத்தரவிட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.. தண்ணீர் திறக்கப்படுமா?
    Next Article திருப்பதி மலையில் நமாஸ் செய்த நபர்.. போலீசார் விசாரணை!!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.