Close Menu
    What's Hot

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஓரணியில் தமிழ்நாடு”- திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்
    தமிழ்நாடு

    “ஓரணியில் தமிழ்நாடு”- திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2025Updated:June 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திட, தமிழ்நாட்டின் நலனையும் உரிமைகளையும் காத்திட “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

    நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு செய்வதற்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது.

    சாமானியரை இணைக்கும் முதல் மக்கள் பிரச்சார இயக்கம்

    நம் மண், மொழி, சுயமரியாதையை காக்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களிடமும் (2 கோடி குடும்பங்கள்) இப்பிரச்சாரத்தை கொண்டு சென்று அதில் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒரே தமிழ்நாடு அணியில் (ஓரணி) இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார இயக்கம். இப்பிரச்சாரம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு எனும் செயலியின் மூலம் செயல்படுத்தப்படும். இயக்கத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை அழைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து இணைந்து கொள்ளலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கும் உறுப்பினராக இணைய இந்த செயலி வழிவகுக்கும்.

    திராவிட மாடலின் பெருமையை வலியுறுத்தும் பிரச்சார இயக்கம்

    ஒன்றிய அரசின் மாநில உரிமைகளை பறிக்கும் திட்டங்கள், மொழித் திணிப்பு ஆகிய சவால்களுக்கு எதிராக பண்பாடு மற்றும் அரசியல் தளத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான அழைப்பே இப்பிரச்சார இயக்கம். அரசியல் மற்றும் பண்பாட்டு அழுத்தங்களால் தமிழ்நாடு சூழப்படும்போதெல்லாம் “ஓரணியில் தமிழ்நாடு” ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் மாநிலத்தின் கூட்டாட்சி உரிமைகளை வலியுறுத்தும். மாநிலத்தின் உரிமைக் குரல்களை முடக்கவும் வலிமை இழக்கவும் ஒன்றியம் செய்யும் முயற்சிகளுக்கு இப்பிரச்சார இயக்கம் நேரடி பதிலாக அமைவதோடு மக்களாட்சியில் திமுகவின் உறுதியான பங்களிப்பையும் வெளிப்படுத்தும். இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு சொல்லும் செய்தி ஒன்றுதான்.

    “அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.
    ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!”

    இதுமட்டுமல்லாது வஞ்சக பா.ஜ.க.வையும், துரோக அ.தி.மு.க.வையும்விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடரகளப்பணியைத் தொடங்குவோம்! என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    DMK DMK General Council DMK Meeting Madurai DMK Political Strategy DMK Resolution 2026 DMK Special Resolution Dravidian Politics MK Stalin One Nation One Tamil Nadu One Tamil Nadu Tamil Nadu government Tamil Nadu News Tamil Nadu Politics Tamil Nadu Resolution
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராஜ்யசபா தேர்தல் – அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி..
    Next Article ஆகஸ்ட் 10-ல் பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு – ராமதாஸ் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026

    திமுகவுக்கு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ்!. ஸ்டாலினை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி!

    February 20, 2026

    விஜய்யை நோக்கி வரும் முன்னாள் அமைச்சர்கள்!. முட்டுக்கட்டை போடும் அதிமுக தலைமை?. செங்கோட்டையன் பகீர்!

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    Trending Posts

    AI உச்சி மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்., இளைஞர்கள்!. டெல்லி போலீஸ் அதிரடி!

    February 20, 2026

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி!. 163 மில்லியன் ரீச்!. புதிய சரித்திரம் படைத்த ஜியோஸ்டார்!

    February 20, 2026

    ரூ.70,000 கோடி ஊழல்!. ஹைதராபாத் பிரியாணி உணவகங்களின் தரவுகளை அலசிய ஏஐ!.  அதிரும் இந்தியா!

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.