தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி உள்ளது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 30 சதவித வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்பது தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சி.
இதுபற்றி இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வது இலக்காக கொண்டு கட்சிப் பணிகளை துரிதப்படுத்த மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார். அதேபோன்று அதிமுக வலுவாக உள்ள மாவட்டங்களில் எத்தகைய முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.