போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் கொகைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அத்தோடு அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமின் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version