அன்மையில் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் என்றால் அது ஸ்ரீகாந்த் தான். இந்தாண்டு தொடக்கத்தில், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தில் இவரது ‘தினசரி’ என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகியுமான சிந்தியா லூர்து சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டார்.
இப்படத்தில் இருந்து வெளியான பாடல்களில் இவரது நடிப்பு மூலம் நெட்டிசன்களுக்கு இரையானார். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருந்ததால், அவரும் ட்ரோலுக்கு உள்ளானார். பணம் கிடைக்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் நடிக்க வேண்டுமா என பல கிண்டல் கேலிக்கு உள்ளானார். இப்படத்தை தொடர்ந்து ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியானது. ஆயினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த.
இந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் அதிமுக வழக்கறிஞர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.