2006ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் மூன்று வேடத்தில் நடித்து வெளியான வரலாறு திரைப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தில் அசின், கனிகா, எம்.எஸ். பாஸ்கர், மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கும். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை மேலும் வலுசேர்த்தது. அனைத்து ரீதியிலும் ஜனரஞ்சகமான கமர்சியல் படமாக இந்த திரைப்படம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து அன்றைய தேதியில் ஒரு சாதனை படைத்தது.

இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அஜித்குமார் இடையே நடைபெற்ற விவாதத்தை கே எஸ் ரவிக்குமார் ஒரு காணொளியில் கூறியிருக்கிறார்.

“கதையை கூறிய பின்பு அஜித்குமார் என்னிடம் சார் அந்த அப்பா கதாபாத்திரம் நான் ஏற்று நடித்தால் என்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்களா ? இது சரியாக வருமா என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சார் நாம் பண்ண போகும் கதை மற்றும் திரைக்கதையில் உங்களை கிண்டல் செய்ய வாய்ப்பு இல்லை.

இந்த கதை துவக்கத்தில் இரண்டு மகன் கதாபாத்திரத்தை தான் காட்டப் போகிறோம். ஒருவர் ஹீரோ மற்றொரு வில்லன். இடைவேளைக்கு பின்பு தான் அப்பா கதாபாத்திரத்தை காட்டப் போகிறோம். உங்களுக்கு பிடிக்காத ஒரு சில திரை ரசிகர்கள் கூட இந்தப் படத்தை கிண்டல் செய்ய வாய்ப்பு இல்லை. அப்படி ஒருவேளை கிண்டல் செய்தால் நான் இனி படம் எடுக்க மாட்டேன் சார் என்று அவரிடம் உறுதி கூறினேன். அந்த தைரியத்தை நான் அவருக்கு கொடுத்த பின்பு இந்த திரைப்படத்தை ஆரம்பிக்கலாம் என்று எனக்கு ஓகே சொன்னார்.

இவ்வாறு கே எஸ் ரவிக்குமார் அஜித் குமாரிடம் நடைபெற்ற அந்த விவாதம் குறித்து கூறியிருக்கிறார். மேலும் ஒரு மிகப்பெரிய ஹீரோ பெண்மை கதாபாத்திரத்தில் இருக்கும் ஒரு ஆண் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் சவாலான விஷயம். அந்த விஷயத்தை அஜித்குமார் செய்தார் என்று அஜித்குமாரை பாராட்டி இருக்கிறார்.

வரலாறு திரைப்படத்திற்காக தமிழக அரசு சார்பாக சிறந்த நடிகர் மற்றும் பிலிம்பேர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை அஜித் குமார் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version