முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கிற்குள் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ஜனநாயகன்” படம் தமிழகத்தில் ஆயிரம் திரைகளிலும், இந்தியா முழுக்க 3000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் இன்று ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. இதனிடையே கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும், ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீசானது.

இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை நகரம் முழுவதும் நேற்று இரவு முதலே திருவிழாக்கோலம் பூண்டது. படம் வெளியாகும் நாளுக்காக பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்கள், வெளியீட்டுக்கு முந்தைய இரவே திரையரங்குகள் முன்பு திரண்டு உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி திரண்ட நிலையில் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்

அந்தவகையில், சென்னை ரோகிணி தியேட்டரில் அமைச்சர்கள் N.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் ஒன்றாக ஜன நாயகன் படம் பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட செஃல்பியை சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் அருண்ராஜ் பதிவிட்டுள்ளார். மேலும், படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்று சொல்வதைவிட வானளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். CM விஜய்யின் கடைசி படம் எனது முதல் படமாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version