தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் சித்தார்த். தமிழில் கமலுடன் இணைந்து இவர் நடித்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வியடைந்தாலும், இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. சித்தார்த், சரத்குமார், தேவையானி உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘3பி.எச்.கே.’ 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
சித்தார்த்தின் 40-வது படமான இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. மிடில் கிளாஸில் இருக்கும் குடும்பம், தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பி.எச்.கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
