Close Menu
    What's Hot

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ
    தேர்தல் 2026

    ‘இதைச் செய்யலைன்னா ஓட்டுக் கேட்டு போக முடியாது!’ – பரிதாபமாக புலம்பும் தென்காசி காங். எம்எல்ஏ

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tenkasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் செய்துகொடுக்காததால் என் தொகுதி மக்கள் என்னை, ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்தத் திட்டத்தைக் கூட உன்னால கொண்டுவர முடியலையே’ என்று திட்டுகிறார்கள்” தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பழனி நாடார் தான் இப்படி புலம்பி இருக்கிறார்.

    இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டம் என்பது தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தென்காசி தொகுதி பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் இரட்டைகுளம் – ஊத்துமலை கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவோம்” என வாக்குறுதி அளித்தார்.

    ஆனால், கடந்த நாலரை ஆண்டுகளில் அதற்கான எந்த நகர்வும் நடக்கவில்லை. இந்த நிலையில், இது விஷயமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தென்காசி எம்எல்ஏ-வான பழனி நாடார், “இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னதால் தான் கடந்த முறை நான் வெற்றி பெற்றேன்.

    ஆனால், அதற்கான வேலைகள் நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொகுதியின் முக்கியமான 10 பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக எழுதிக் கொடுக்கும்படி அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்களிடமும் முதல்வர் ஸ்டாலின் கேட்டிருந்தார். அப்போது, இரட்டைகுளம் கால்வாய் திட்டம், ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ஊத்துமலையை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நானும் எழுதிக் கொடுத்திருந்தேன்.

    அண்மையில் தென்காசிக்கு வந்திருந்த முதல்வர் எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், தென்காசிக்காக முதல்வர் அறிவித்த 10 அறிவிப்புகளில் இரட்டைகுளம் கால்வாய் திட்டம் இல்லாமல் போனதில் நானும் எனது தொகுதி மக்களும் மிகுந்த வருத்தமடைந்தோம்.

    என் தொகுதி மக்கள், ‘நீயெல்லாம் என்னய்யா எம்எல்ஏ… இந்த திட்டத்தைக்கூட கொண்டுவர முடியலையே’ என்று என்னைத் திட்டுகிறார்கள். இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை அறிவித்தால் மட்டும்தான் இனி தென்காசி தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுச் செல்ல முடியும். இல்லாவிட்டால், ஓட்டுக் கேட்டுச் செல்லும்போது விபரீதம் ஏற்படும்.

    எனவே, இத்திட்டத்தை முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டும். இத்திட்டத்துக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தி, கால்வாய் வெட்டித் தர அனுமதித்தால் நானே எனது சொந்தச் செலவில் கால்வாய் வெட்டிக் கொடுத்துவிடுவேன்.

    தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றிவிட்டதா என்று கேட்டால் அதற்கு என்னிடம் விடை இல்லை. நான் சொன்னால் குறை சொல்வதுபோல் ஆகிவிடும். அரசை குறை சொல்வதற்கு எனக்குத் தகுதி இல்லை. அரசு நல்ல முறையில் செயல்படுகிறது.

    காங்கிரஸ் தலைமை மூலமும் சட்டப்பேரவையிலும் பல முறை இத்திட்டத்தை வலியுறுத்திவிட்டேன். இத்திட்டம் அறிவிக்கப்படுவதாகத்தான் இருந்தது. எப்படி மாறியது என்று தெரியவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ என்பதால் என்னை ஒதுக்குகிறார்களா என்றும் தெரியவில்லை” என்றார்.

    tenkasi#mla
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
    Next Article மகளிரை ஏமாற்றுவதுதான் உரிமைத் தொகை திட்டமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    February 13, 2026

    யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!

    February 7, 2026

    “2026-ல் தர்மம் வெல்லும்; 26 தொகுதிகளில் பா.ம.க வெற்றி நிச்சயம்!” -பா.ம.க செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி

    January 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்!. 

    தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 

    நாட்டிற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!. தவெக தலைவர் விஜய்!

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    முகத்திலே புன்னகை; அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை நல்லக்கண்ணு!. முதல்வர் ஸ்டாலின்!

    February 25, 2026

    எளிமையின் சிகரம்!. விடைபெற்றார் கம்யூனிஸ்ட் சிங்கம்!. 100 ஆண்டு கால கொள்கை பயணம் நிறைவு!

    February 25, 2026

    மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.