Close Menu
    What's Hot

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    உலகக் கோப்பை ஹாக்கி தொடர்..! இந்திய பெண்கள் அணி அறிவிப்பு..!

    கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் பறிமுதல்!
    Featured

    திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் பறிமுதல்!

    Editor web1By Editor web1July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 18 09h04m06s906
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அலுவலக கோப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் சோதனைகள், லஞ்சப் புகார்களில் சிக்கி வரும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநவம்பர் மாதம் உச்சத்தை எட்டும் ‘சூப்பர் எல் நினோ’: வடகிழக்கு பருவமழையில் நேர்மறை IOD-ன் தாக்கம் என்ன?
    Next Article ‘தமிழ்நாடு நாள்’: தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
    Editor web1
    • Website

    Related Posts

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    July 18, 2026

    உலகக் கோப்பை ஹாக்கி தொடர்..! இந்திய பெண்கள் அணி அறிவிப்பு..!

    July 18, 2026

    கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுக்கோட்டை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..! படகுகளை பாதுகப்பாக வைக்க அறிவுறுத்தல்..!

    உலகக் கோப்பை ஹாக்கி தொடர்..! இந்திய பெண்கள் அணி அறிவிப்பு..!

    கோவையில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர்களிடம் கைவரிசை! கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!

    கோவை கணுவாய் மலைப்பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்- வனத்துறைக்கு கோரிக்கை!

    ‘தமிழ்நாடு நாள்’: தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.