Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
    Featured

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Prakashraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுடெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் மாணவர்களை பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் படங்களுடன் கரப்பான்பூச்சி உருவங்கள் இடம்பெற்ற விளம்பர பலகைகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா, நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், வெளிநாட்டு நிதி உதவியுடன் நாட்டில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஈடுபடுவதாகவும், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல என்றும் குற்றம்சாட்டினார்.

    பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    BJP PoliticalRow PrakashRaj YashpalSuvarna
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை
    Next Article கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு
    Editor web2
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.