Close Menu
    What's Hot

    தீரன் சின்னமலை நினைவுநாள்… முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீரவணக்கம்

    பிரிஜ் பூஷண் வழக்கில் தீர்ப்பு.. ‘போதிய ஆதாரம் இல்லை’ என விடுதலை செய்த நீதிமன்றம்!

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!
    Featured

    காவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!

    editor5By editor5August 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால், தமிழகத்தை நோக்கி நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது சம்பா சாகுபடிக்கான நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு 79 அடிக்கும் குறைவாக இருந்ததால், பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது.

    தமிழகம் கர்நாடகத்திடம் காவிரி நீரைக் கோரியபோதும், வழக்கம் போல் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஜூன் 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழக அரசு அழுத்தமாக வாதங்களை முன்வைத்தது. அதன்படி, 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் (சுமார் 4½ டி.எம்.சி.) நீர் திறக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கர்நாடகம் இதையும் மறுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. ஜூலை 24-ஆம் தேதி ஆணையம் மீண்டும் கூடி, கர்நாடக வாதத்தை நிராகரித்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இரு மாநில முதலமைச்சர்களும் பெங்களூரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கர்நாடகத்தில் எதிர்ப்பு வலுத்ததால் டி.கே.சிவகுமார், தமிழக முதல்வர் வரவேண்டாம் எனக் கூறினார். தமிழக எதிர்க்கட்சிகளும் இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அரசியல் பதற்றத்திற்கு இடையே, ஜூலை 31-ஆம் தேதி காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது.

    கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு வினாடிக்கு சுமார் 28,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் எல்லையைக் கடந்து தமிழக மண்ணை வந்தடைந்துள்ளது. கர்நாடக அணைகளில் தற்போது கிருஷ்ணராஜசாகரில் 91.8 அடி (மொத்த கொள்ளளவு 124.8 அடி), கபினியில் 56.28 அடி (65 அடி), ஹேரங்கியில் 127.55 அடி (129 அடி), ஹேமாவதியில் 100.98 அடி (117 அடி) நீர் உள்ளது.

    இந்த அணைகள் வேகமாக நிரம்பும் நிலையில், தமிழகத்திற்கான நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் தற்போது 73.82 அடி நீர் உள்ளது. வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்து, சம்பா சாகுபடிக்காவது மேட்டூரில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளது.

    Cauvery Water tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!
    Next Article திருப்பூரில் அதிர்ச்சி!. போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி!. காவல் உதவி ஆய்வாளர் மனைவி உள்பட 4 பேர் கைது!
    editor5

    Related Posts

    தீரன் சின்னமலை நினைவுநாள்… முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீரவணக்கம்

    August 3, 2026

    பிரிஜ் பூஷண் வழக்கில் தீர்ப்பு.. ‘போதிய ஆதாரம் இல்லை’ என விடுதலை செய்த நீதிமன்றம்!

    August 3, 2026

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீரன் சின்னமலை நினைவுநாள்… முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் வீரவணக்கம்

    பிரிஜ் பூஷண் வழக்கில் தீர்ப்பு.. ‘போதிய ஆதாரம் இல்லை’ என விடுதலை செய்த நீதிமன்றம்!

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  

    காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.