டெல்லியை உலுக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில்  காங்கிரஸ் களம் காணும் நிலையில், திமுக எம்.பிக்கள் என்ன செய்கிறார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவப் படிப்பு தொடர்பான நீட் தேர்வினை மத்திய அரசு அறிவித்தபோதே அதற்கான எதிர்ப்புக் குரல் என்பது தமிழகத்தில் இருந்துதான் ஓங்கி ஒலித்தது.

அதிலும் கடந்த திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முழுமூச்சாக திமுக எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தனர். காங்கிரஸும் நீட்டை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தது. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் நீட் தேர்வில் இருந்து மாநிலங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தன.

இப்படி நீட் எதிர்ப்பு என்றாலே திமுகதான் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காக்ரோச் ஜனதா கட்சியினர் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்தும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் டெல்லியில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவது நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது.

அதிலும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கூடிய நிலையில், ஜேசிபி நிர்வாகிகள் தொண்டர்கள் மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திரண்டதால் தலைநகர் டில்லியே ஸ்தம்பித்து போனது.

இதனைத் தொடர்ந்து சிஜேபியினர் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களும் இன்னும் பேசு பொருளாகி நாடு முழுவதும் சிஜேபி கட்சியினரை போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் சிஜேபியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டெல்லியில் இரண்டாம் நாள் போராட்டத்தில் காங்கிரஸும் களம் இறங்கி இருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர், உள் துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள், மாணவர்களோடு இணைந்து பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட  முயன்றதால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் முன்னதாகவே எடுக்கவேண்டிய போராட்டத்தை சிஜேபி கையில் எடுத்த நிலையில், காங்கிரஸ் இப்போது சிஜேபியுடன் இணைந்து நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு விட்டது.

ஆனால்,  நீட்டை முற்றிலுமாக ரத்து செய்ய நீட் எதிர்ப்பை பற்ற வைத்தது தமிழ்நாட்டின் திமுக எம்.பிக்களோ என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. “நீட்”டால் இப்போது தலைநகரம் பற்றி எரியும் நிலையில்,

தமிழ்நாடு படுத்து உறங்குகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி,  நீட்டை நீக்க ஒன்றிய அரசை எதிர்த்து போராடிய சக்திகள் இந்த தட்பவெப்பத்தை பயன்படுத்தி மீண்டும் போராட்டத்தை உத்வேகத்துடன் முன்னெடுக்க தவறினால், கடந்த கால போராட்டங்கள் கண்துடைப்பு என்றே வரலாறு பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version