Close Menu
    What's Hot

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமைச்சர் ராஜ்மோகன், ஆட்சியர் வருகையில் தாமதம்!. சாலையில் 3 மணிநேரம் காத்திருந்த மாணவர்கள்!
    Featured

    அமைச்சர் ராஜ்மோகன், ஆட்சியர் வருகையில் தாமதம்!. சாலையில் 3 மணிநேரம் காத்திருந்த மாணவர்கள்!

    Editor web3By Editor web3June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    perambalur minister late issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில், அமைச்சர் மற்றும் ஆட்சியரின் காலதாமதத்தால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று காலை பெரம்பலூர் பாலக்கரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் காலை 9.15 மணிக்கு பேரணியைத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி, விடுதி மாணவ-மாணவிகள் காலை 8.15 மணிக்கே வரவழைக்கப்பட்டு, சாலையில் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

    ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் பேரணி தொடங்கப்படவில்லை. வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வந்த மாணவர்கள், சுட்டெரிக்கும் வெயிலிலும் புழுதியிலும் சுமார் 10.40 மணி வரை கால்கடுக்கக் காத்திருக்க வைக்கப்பட்டனர். பின்னர்தான், மாவட்ட ஆட்சியர் சரண்யாவுடன், கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் தாமதம் ஏற்பட்டது என்ற விவரம் தெரியவந்தது.

    இறுதியாக, காலை 10.45 மணியளவில் அமைச்சர் ராஜ்மோகன் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியதை அடுத்து, காலை 11 மணியளவிலேயே மாணவர்கள் தங்களின் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    collector late minister rajmohan perambalur Rally
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக+திமுக+அதிமுக = கொள்கை புடலங்காய்..!! சிபிஎம் விமர்சனம்..!!
    Next Article என்னது..!! அரசுப் பள்ளியில் மாணவர்கள் சினிமா பாட்டு பாடுனாங்களா..!! TN Factcheck சொன்னது என்ன..??
    Editor web3
    • Website

    Related Posts

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    June 24, 2026

    ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?

    June 24, 2026

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

    ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு!. பிரதமர் மோடிக்கு அதிபர் அழைப்பு?

    அன்பில் மகேஷ் உள்நோக்கம்; தி.மு.க. ஐ.டி. விங் அநாகரீகம் – அமைச்சர் விஸ்வநாதன் சாடல்

    அருணாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு: வெள்ளம் – நிலச்சரிவு; மூன்று பேர் மாயம்..!!

    அடுத்தடுத்தடுத்து வெளியாகும் அதிரடி; விஜய் ஆட்சியில் காவல்துறையினர் 170 பேர் இடமாற்றம்  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.