விஜய்யின் தவெக சார்பில் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோம் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது விஜய்யின் தவெக கட்சி. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது, கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, புதிய தொண்டர்களை இணைப்பது என தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றனர் தவெகவினர்.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்குள் விருப்ப மனுக்கள் வழங்கப்படவுள்ளது.
14-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட மனுக்களை பெற்றுக் கொள்ள மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாவும், இந்தக் குழுவிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
