ஈராட்டில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தவெகவினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய்பாலாஜி கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகள் கேட்பதில்லை எனவும் சம்பந்தமே இல்லாத கேள்விகள் கேட்பதாகவும் கூறினார்.
கடந்தாண்டு செய்த தவறுகளை மறைப்பதற்காக புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் பேசவில்லையே என்னும் கேள்விக்கு சட்டப்பேரவையில் பேசவில்லை என்றாலும் மக்களுடன் முதலமைச்சர் பேசிக் கொண்டுதான் இருப்பதாக கூறிய அமைச்சர் விஜய்பாலாஜி,
சட்டமன்ற கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு தடையானதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் எனக் கூறியதோடு, அது சரி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேகதாது தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியது அவர்களது அரசியல் எனவும், அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை எனவும் கூறினார்.

