Close Menu
    What's Hot

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள்-  zoho இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
    Featured

    திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள்-  zoho இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 zoho
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் தொடங்க லஞ்சம் வாங்கப்பட்டது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி வரும் நிலையில், அது உண்மைதான் என்பதுபோல், திமுக ஆட்சியில் தனது பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள் என ZOHO இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

    தான் வெளியிட்ட பள்ளி தொடர்பான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தவெக அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டவை என்றும் திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருவதாக தொழில்நுட்பத் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்த அவர், கலைவாணி கல்வி மையத்தின் கீழ் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இலவச NIOS பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கூறினார்.

    தேனி பள்ளி முதலில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்டதாகவும், அவர் நடத்திய சிபிஎஸ்இ பள்ளிக்கு மாநில அரசின் NOC பெற அதிகளவு பணம் கோரப்பட்டதால் பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த அறக்கட்டளையை தாங்கள் பொறுப்பேற்று இலவச பள்ளியை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

    மேலும், தேனி பள்ளிக்கு மாநில அரசின் பதிவு இல்லாத காரணத்தால் திமுக ஆட்சியில் அவ்வப்போது நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், மீண்டும் அரசு அனுமதி பெற முயற்சித்தபோதும் அது பணச் செலவுகளுடன் கூடிய சிக்கலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தென்காசியில் புதிய பள்ளி கட்டிடங்களை அமைப்பதற்காக DTCP அனுமதி கோரி விண்ணப்பித்தபோதும், திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்றும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    “அனுமதி கிடைத்ததோடு மட்டுமல்லாமல், எந்த அனுமதிக்கும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளே கூறினர். இதுபோன்ற மாற்றத்தை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டியது என் கடமை” என்று அவர் கூறியுள்ளார்.

    தன்னை டிவிகே ஆதரவாளர், பிராமணர், சங்கி என தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாக குற்றம்சாட்டிய ஸ்ரீதர் வேம்பு, “நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவன். எளிய பின்னணியில் இருந்து வளர்ந்தவன். தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடையவும், கிராமப்புற வளர்ச்சிக்காகவும் என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். இத்தகைய தாக்குதல்களால் நான் பின்வாங்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், “என்னை மிரட்ட முடியாது. மரணத்திற்கே அஞ்சாத நான், திமுகவுக்கு ஏன் அஞ்ச வேண்டும்? மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு என் குணநலனை விமர்சிக்கட்டும்” எனவும் ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த பதிவில், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அருவருப்பூட்டும் அளவுக்கு ஊழல் நிலவியதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது எந்த ரகசியமும் அல்ல; உலகமே அறிந்த உண்மை என்று குறிப்பிட்ட அவர், ஊழல் இமயமலை உயரத்தை எட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசில் பணியாற்றிய நிதியமைச்சரே ஊழல் குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும், அந்த கருத்துகள் வெளியில் வந்த பிறகு அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    “இது கொள்கை சார்ந்த விவகாரம் அல்ல. அப்போது திமுகவுடன் கூட்டணியில் இருந்த கேரள மார்க்சிஸ்ட் தலைவர்கள்கூட திமுகவில் ஊழல் ஆழமாக வேரூன்றியிருந்ததாக கூறியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் பாலகோபால் போன்ற நேர்மையான பொதுச்சேவையாளர்களை தான் எப்போதும் மதிப்பதாகவும், அவர்களுடன் அரசியல் கொள்கையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களின் நேர்மையை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    திமுக உண்மையாகவே சுயபரிசோதனை செய்ய விரும்பினால் முதலில் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு பதிலாக தன்னை டிவிகே ஆதரவாளர், பிராமணர், சங்கி என தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இறுதியாக, திருக்குறள் 423-ஐ மேற்கோள் காட்டிய அவர், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற வள்ளுவர் வாக்கை நினைவுபடுத்தி, செய்தியை யார் சொல்கிறார்கள் என்பதை விட அதன் உண்மைத்தன்மையைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Bribery Allegation DMK School Approval Sridhar vembu Zoho
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎபோலா அச்சுறுத்தல்: வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்புக்கு ‘ஏர் சுவிதா 2.0’ அறிமுகம்..!!
    Next Article பஸ்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்ப நடந்திடுச்சு..!! CM விஜய் பற்றி கண்டக்டர் சொன்ன சுவாரசிய தகவல்..!!
    Editor TN Talks

    Related Posts

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    June 25, 2026

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    June 25, 2026

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    பஸ்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்ப நடந்திடுச்சு..!! CM விஜய் பற்றி கண்டக்டர் சொன்ன சுவாரசிய தகவல்..!!

    திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள்-  zoho இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.