டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சனின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளர் மருது கணேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை  நீதிபதி கே. குமரேஷ்பாபு விசாரித்தார்.

இதே வழக்குடன், திருவெறும்பூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. நவல்பாட்டு விஜய் (எஸ். விஜயகுமார்), திண்டுக்கல் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார், திருவள்ளூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. அருண்குமார், மொடக்குறிச்சி தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. டி. சண்முகம் மற்றும் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.சி. கோவிந்தராஜன் ஆகியோரின் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்குகளில் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

இதனிடையே, கோபிசெட்டிபாளையம், மைலம், ஜோலார்பேட்டை, திருமயம் மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளிலும் மனுக்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அவகாசம் வழங்கி, அவற்றை வெவ்வேறு தேதிகளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும், தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் வழக்குகள் அனைத்தும் ஒவ்வொரு புதன்கிழமையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version