Close Menu
    What's Hot

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!
    Featured

    ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!

    editor5By editor5June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 01 at 11.48.02 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டை காவிமயமாக்க ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவநத்தம் பழங்குடியின மலைக்கிராமத்திற்கு சமூக நீதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு நேற்று பயணம் மேற்கொண்டார். துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், பழங்குடியின மக்களின் பல்வேறு குறைகளையும் பிரச்னைகளையும் நேரடியாக கேட்டறிந்தார். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

    இதையடுத்து, ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற 16 மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, நொய்டாவில் உள்ள ஐஐடியில் உயர் கல்வி பயில்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஒட்டி சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவித்தார். பழங்குடியின மாணவர்களின் கல்வி சாதனைக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

    விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தாட்கோ (தமிழ்நாடு பழங்குடியினர் நல வளர்ச்சிக் கழகம்) மூலம் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளை எளிமைப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை இருந்த குற்றச்சாட்டுகள் குறித்து துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றார். கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்க மத்திய அரசுக்கு பழங்குடியினர் நலத்துறை பரிந்துரை செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    தமிழ்நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு முறையான மயான வசதிகள் செய்து தர அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இதற்காக தாம் பலமுறை போராட்டம் நடத்தியதாகவும், தற்போது மாநிலம் தழுவிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வட மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள விவகாரத்தில் அவர் உரிய முடிவு எடுப்பார் என்றார்.

    கவர்னர் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் திருவள்ளுவரை காவிமயமாக்கிய செயல் கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். தமிழ்நாட்டை காவிமயப்படுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி நடைபெறுவதாகவும், சனாதனத்தின் அடையாளமாக மாற்றும் செயலுக்கு எதிராக எல்லா வகையிலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும் எச்சரித்தார். முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவியும், தற்போதைய ஆளுநர் அர்லேக்கரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும், அவரை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் சின்னமாக்கும் முயற்சி தமிழ்நாட்டில் வெற்றிபெறாது என்றும் வன்னியரசு உறுதியாகத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி டைமிங் மிஸ்சே ஆகாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்..!!
    Next Article கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
    editor5

    Related Posts

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    June 1, 2026

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    June 1, 2026

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.