Close Menu
    What's Hot

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  

    காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வறண்டு காணப்படும் மிருகண்டா அணை !. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதக்கும் மீன்கள்! விவசாயிகள் கவலை!
    Featured

    வறண்டு காணப்படும் மிருகண்டா அணை !. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதக்கும் மீன்கள்! விவசாயிகள் கவலை!

    Editor web3By Editor web3August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mirukanda Dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள மிருகண்டா நதி அணை, அப்பகுதி விவசாயப் பாசனத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. இந்த அணையின் மூலம் சுற்றியுள்ள சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் தொடர் மழையின்மையால் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் அணையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரினுடைய வெப்பநிலை அதிகரித்து, நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியுள்ளன.

    மறுபுறம், பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காததால் சில வாரங்களுக்கு முன்பு நடப்பட்ட நெற்பயிர்கள் வறண்டு, பல இடங்களில் வயல் வெடித்து நாற்றுகள் கருகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணி மற்றும் வேளாண் துறையினர் உடனடியாக இந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதுடன், விவசாயிகளுக்கு மாற்றுப் பாசன வசதிகளைச் செய்துதர வேண்டும் என இப்பகுதி மக்களும் விவசாயிகளும் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Farmers worried Fish floating dead Mirukanda Dam dry oxygen depletion
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகனிம விற்பனையில் புதிய நடைமுறை.. கூடுதல் கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி..!!
    Next Article தண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    August 3, 2026

    சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  

    August 3, 2026

    காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நீருக்காக தஞ்சையில் முழங்கிய திமுக.. உதயநிதி முன்னிலையில் போராட்டம் தொடக்கம்!

    சாதி மதமற்றவர் என சான்றிதழ்…. நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!  

    காற்றில் பறந்தது விஜய்யின் ஆர்டர்.. அரசுப் பள்ளியில் TVK முழக்கம்.. பூரித்த அமைச்சர் பிரபு!!

    மேலூர்; சாலை விபத்தில் பெண் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு…

    திருப்பூரில் அதிர்ச்சி!. போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி!. காவல் உதவி ஆய்வாளர் மனைவி உள்பட 4 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.