காவல் மரணங்கள் தொடரும் நிலையில், முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில், நாகர்கோவில் சிறையில் இளைஞர் சபரிவர்மன், தூத்துக்குடியில் இளைஞர் அருணாசலம், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெங்கடேசன், சென்னை புழல் சிறைக்கைதி பாலாஜி ஆகியோரின் உயிரிழப்பு தொடர்பான போஸ்டர்களைப் பகிர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், தொடரும் காவல் மரணங்கள்… முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது என வினா எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? என விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்,

Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக .வெ.. அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version