Close Menu
    What's Hot

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!
    Featured

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    Editor web3By Editor web3June 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 chennai corporation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடித்து அகற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மொத்தம் 337 கட்டடங்கள் முற்றிலும் பாதுகாப்பற்றவை என மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டறியப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பாதுகாப்பற்றவை எனப் பட்டியலிடப்பட்டவைகளில் 130 கட்டடங்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானவை ஆகும். இதில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 105 கட்டடங்கள் உடனடியாக இடித்து அகற்றப்பட வேண்டியவையாகக் குறிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் உள்ள 128 தனியார் கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 69 கட்டடங்கள் இடிக்கத்தக்க நிலையில் உள்ளன. அரசின் இதர துறைகளுக்குச் சொந்தமான 79 கட்டடங்களும் பாதுகாப்பற்றவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    பாதுகாப்பற்றவை என முத்திரையிடப்பட்ட இந்த கட்டடங்களில் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மழைக்காலம் தொடங்கும் போது இந்தக் கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த பழுதடைந்த கட்டடங்களை இடிக்கும் பணி முழு வீச்சில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Chennai corporation dilapidated buildings Monsoon
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
    Next Article கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்
    Editor web3
    • Website

    Related Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    June 17, 2026

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    June 17, 2026

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    லாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.