Close Menu
    What's Hot

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பருவமழை முன்னெச்சரிக்கை!. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!
    Featured

    பருவமழை முன்னெச்சரிக்கை!. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM VIjay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்யவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் இக்கூட்டத்தில் முதலமைச்சரிடம் விளக்கினர்.

    இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எந்தவொரு பேரிடர் காலத்திலும் பொதுமக்களின் உயிர்ச் சேதத்தைத் தடுப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்களும், அவசர காலச் செயல்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும். மீட்புக் குழுவினர் மற்றும் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

     தேவைப்படும் இடங்களில் முகாம்களைத் தூய்மையாகப் பராமரித்து மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், மரம் விழுதல் மற்றும் தேங்கும் மழைநீரை அகற்றும் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். பருவமழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்.

    பலவீனமான மின் கம்பங்கள், ஆபத்தான மின்கம்பிகளை உடனே சீரமைக்க வேண்டும். மின்கம்பி அறுந்து விழுந்தால் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் நான்கு மாதங்களில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஆகாயத்தாமரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை இப்போதிருந்தே தொடங்கி உரியக் காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் திக் திக் சம்பவம்: ரத்த வெள்ளத்தில் உதவி பேராசிரியை.. கொடூர படுகொலையின் பின்னணி என்ன..??
    Next Article மீண்டும் தலைதூக்கும் எபோலா அச்சுறுத்தல்..!! ஐதராபாத்தில் வைரஸ் தொற்று அறிகுறி..??
    Editor web3
    • Website

    Related Posts

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    June 9, 2026

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    June 9, 2026

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் : தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி..! 14 பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர்..!

    உலகப் பெருங்கடல் தினம்..!! கோவளம் கடற்கரையை சுத்தம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!!

    ஆலமரத்தையே அசைத்துப் பார்த்த சூறைக்காற்று..!! போராடி அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை..!!

    நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை..!! அவதூறு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு..!!

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.