பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்ட நிரம்பி காணப்படுகிறது.
கோடை வெயில் அதிகரித்தும் கூட, அதனை பொருட்படுத்தாமல் மக்கள் குளு குளுவென இருக்கும் சுற்றுலா மையங்களை நாடி செல்கின்றனர். கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டது.
தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா வகுப்புகளும் நிரம்பியதால், மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், கோவை, பெங்களூரு நகரங்களுக்கு செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்களில் வருகிற 17-ந்தேதி வரை இடமில்லை.
மே மாதம் இறுதி வரையில் இதே நிலைதான் நீடிக்கும். ஜூன் மாதம் முதல் வாரம் வரை ரெயில்களில் இடம் கிடைப்பது கடினம். காத்திருப்போர் பட்டியல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
