கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக முண்டத்திக்கோடு பகுதியில் பட்டாசுகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்ட பட்டாசுகள் கடும் வெப்பத்தால் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 13 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சூர் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வேதனையை அளிப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”திருச்சூரில் பட்டாசு சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, முழு அரசு இயந்திரமும் களமிறக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேவைப்பட்டால், மாநிலத்திற்கு வெளியில் இருந்து வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை உட்பட, தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் முயற்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயர நேரத்தில் கேரளம் அவர்களுடன் துணை நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version