Close Menu
    What's Hot

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!
    Featured

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    editor5By editor5July 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 43 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு ₹10 முதல் ₹15 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி உணவுப் பொருளான அரிசியின் விலை ஏற்றம் குடும்ப பட்ஜெட்டை பாதிக்கத் தொடங்கியுள்ளது.

    கர்நாடகாவில் நெல் உற்பத்தி கடுமையாகக் குறைந்ததே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என அரிசி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டாலும், பெரும்பாலானோர் உயர் தரமான கர்நாடக பொன்னி அரிசியை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு கர்நாடகாவில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிலோ ₹55-க்கு விற்ற கர்நாடக பொன்னி அரிசி, முதலில் ₹65-ஆகவும், தற்போது ₹80-ஆகவும் உயர்ந்துள்ளது. 25 கிலோ மூட்டை ஒன்றின் விலை ₹350 முதல் ₹500 வரை அதிகரித்துள்ளது. இட்லி அரிசியின் விலையும் ₹35-லிருந்து ₹50-க்கு உயர்ந்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    தமிழக அரிசியும் பாதிப்பு: தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடக வியாபாரிகள் தமிழகத்தில் உற்பத்தியாகும் நாட்டுப் பொன்னி அரிசியை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தின் நாட்டுப் பொன்னி விலை ₹60-லிருந்து ₹85-ஆக உயர்ந்துள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கூற்றுப்படி, நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி நெல் உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த கோடைக்காலத்தில் 1.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குருவை சாகுபடியும் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. அரசு இலக்கிட்ட 1 லட்சம் ஏக்கருக்கு பதிலாக 60,000 ஏக்கரில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை காரணமாக மகசூல் குறையும் அபாயமும் உள்ளது.

    இந்த நிலையில், அரிசி களவு மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வறட்சியால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி தொடர்ந்தால் அரிசி விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு உரிய ஆதரவு வழங்கி உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை நிலையை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    Price Hike rice tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்
    Next Article பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா
    editor5

    Related Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.