Close Menu
    What's Hot

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு
    Featured

    தவெகவில் திமுக எம்.எல்.ஏக்கள் இணையாததால் கைது நடவடிக்கை- ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 rs barathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவை போல திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவில்லை என்பதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாக  ஆர் எஸ் பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

    விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசியவர்,

    திமுக பொறுத்தவரை இது போன்ற அச்சுறுத்தல் எல்லாம் பார்த்து பயப்படும் கட்சி அல்ல… மிசாவை பார்த்தவர்கள் நாங்கள். ஒருவரை விமர்சிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் சகிப்பது தன்மை வேண்டும் இன்று இருக்கும் ஆளும் கட்சிக்கு அது இல்லை என்றார்.

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்கள். திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அப்படி செல்லவில்லை. அதனால்தான் இப்படி கைது நடவடிக்கை எடுப்பதாக விமர்சித்தார்.

    வழக்கு போடலாம், ஆனால் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஒருவர் தப்பி ஓடினால் கைது செய்யலாம். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது , நாங்கள் சட்டத்தின் படி அனைத்தையும் சந்திப்போம் என்றார்.

    திமுகவைத் தவிர இந்த ஆட்சியை விமர்சிக்க யாரும் இல்லை எனக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, எல்லோருக்கும் அவர்களிடம் சென்று விட்டார்கள். திமுகவை வழக்கு போட்டு ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அது எல்லாம் ஒரு காலத்திலும் நடக்காது என உறுதிபடக் கூறினார்.

    இன்று தமிழகத்தில் கொலை கொள்ளை நடைபெறுகிறது.   காவல்துறை அதன் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதை மட்டும் செய்து வருகிறது. பாதிக்கப்படுவார்கள் வழக்கு போடட்டும்… விஜய் பாதிக்கப்பட்டால் வழக்கு போட வேண்டும் என்றார்.

    இன்று மது கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மக்கள் இருப்பதாகக் கூறியவர், ஜனநாயகன்  படம் ரிலீஸ் அன்று  எல்லோரும் போய் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு விடுமுறை கூட விடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஏகடியம் பேசினார்.

    Arrest Allegations DMK Political News R.S. Bharathi Tamil Nadu Politics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleDC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
    Next Article நீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.