ன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை விரிவாக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் விஜய் பதவியேற்ற போதே வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது விவாதமானது. அப்போது, “இனி இப்படி நடக்காது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

ஆனால், இன்று நடந்த 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் அதேமுறை தொடர்ந்ததால் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன். ஆனால், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகளில் இதுதான் நடைமுறை என்று கூறிவிட்டார்கள். இனிவரும் காலங்களில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும். தமிழுக்கே முதலிடம்” என்றார்.

அதிகாரம் பழகும் ஜென்ஸீ தலைமுறை

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினர் இன்று கல்வி வழங்கும் இடத்திற்கு உயர்ந்துள்ளனர். ஒரு ஜென்ஸீ (Gen-Z) தலைமுறை அரசியல் பழகிய நிலையில், இன்று முதல்வர் ஜோசப் விஜய் கொடுத்த வாய்ப்பால் அதிகாரம் பழகத் தொடங்கியுள்ளது.

இந்த அமைச்சரவையில் பல பெண் அமைச்சர்கள், ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் எனச் சமூக நீதி சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.

60-70 ஆண்டுகால வலியாக, வெறும் கூட்டணியோடு மட்டும் நிறுத்தாமல் காங்கிரஸுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்க வந்த காங்கிரஸ் தோழர்களுக்கு எழுந்த கரவொலியே இதற்குச் சான்று. இளைஞர்களாக வந்துள்ள புதிய அமைச்சர்கள் விரைவில் பணிகளைக் கற்றுக்கொள்வார்கள்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version