Close Menu
    What's Hot

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?
    Featured

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடந்துவந்த தேர்தல் பரப்புரை ஒருவழியாக ஓய்ந்து, வியாழன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பல வாரங்களாக முழங்கிக்கொண்டிருந்த  மேடைகள், மைக் சத்தம், பேரணிகள் அனைத்தும் திடீரென நின்றுவிட்டன. தெருக்களில் ஓடிய பிரசார வாகனங்கள் மறைந்துவிட்டன. அரசியல் தலைவர்களின் மேடை பேச்சுகளும் நின்றுவிட்டன. இனி பேசப் போவது அரசியல் கட்சிகள் அல்ல. பேசப்போகிறவர் ஒருவரே — அவர்தான் வாக்காளர்.

    ஜனநாயகத்தில் தேர்தலுக்கு முன் இருக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. அரசியல் கட்சிகள் தங்களின் கதைகளை, வாக்குறுதிகளை, குற்றச்சாட்டுகளை மக்களிடம் சொல்லும் காலம் முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ஆரம்பிக்கிறது ஒரு மௌனமான தீர்மானம்.இந்த ஆண்டின் தமிழக தேர்தல் பல காரணங்களால் சிக்கலானதாக மாறியுள்ளது. பாரம்பரிய திராவிட கட்சிகளின் போட்டி, புதிய அரசியல் சக்திகளின் வரவு, பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள், மேலும் சினிமா நட்சத்திர அரசியலின் தாக்கம் — இவை அனைத்தும் தேர்தல் சூழ்நிலையை வேறுபட்ட ஒன்றாக மாற்றியுள்ளன.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல தயாராகும் இந்த தருணத்தில், சில முக்கியமான கேள்விகள் இன்னும் பதிலின்றி நிற்கின்றன.

    மௌன வாக்காளர்களின் சக்தி

    தமிழகம் அரசியல் விழிப்புணர்வில் முன்னணியில் இருக்கும் மாநிலமாக நீண்ட காலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை பெரும்பாலும் தீர்மானிப்பவர்கள் நடுநிலை வாக்காளர்கள் எனப்படும் மௌன வாக்காளர்கள்தான்.  அவர்கள் சமூக ஊடகங்களில் கருத்து சொல்லமாட்டார்கள். அவர்கள் மேடைகளில் கோஷம் எழுப்பமாட்டார்கள். ஆனால் வாக்குச்சாவடியில் அவர்கள் எடுக்கும் தீர்மானம்  தேர்தல் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பெண் வாக்காளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்  — இவர்கள் பலரும் தங்களின் முடிவை அமைதியாக எடுத்துக்கொள்வார்கள்.

    நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம், தலைமைத்துவ நம்பிக்கை — இவை அனைத்தையும் அவர்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்வார்கள். அதனால் தான் தமிழகத்தில் பல தேர்தல்களில் எதிர்பாராத முடிவுகள் உருவாகியுள்ளன. அதே சமயம் முதல் முறையாக வாக்களிக்கிற இளைஞர்கள் இளம் யுவதிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய்க்கு காணப்படும் செல்வாக்கு, அந்த இளைஞர்கள் தங்களது குடும்பத்தினரையும், உறவினர்களையும் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ளவர்களையும் விஜய் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது ஏறக்குறைய தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது. எனவே இந்த போக்கும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

    பணப்பட்டுவாடா புகார் 

    தமிழக தேர்தல்களில் அடிக்கடி எழும் ஒரு குற்றச்சாட்டு — “பணம் கொடுத்து ஓட்டு வாங்குதல்”. இந்த தேர்தலிலும் அதே குற்றச்சாட்டுகள் பல இடங்களில் வெளிவந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் பல மாவட்டங்களில் பணம், தங்கம், மது மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொத்தமாக ₹1,262 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக அரசியல் கட்சிகள் ஒருவர்மேல் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளன. சில இடங்களில் இதனால் கட்சித் தொண்டர்களுக்குள் மோதல்களும் ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக கோவையில் எழுந்த பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள் அரசியல் பதற்றத்தை உருவாக்கின. ராமநாதபுரம் பகுதியில் பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து திமுக–அதிமுக தொண்டர்கள் மோதிக்கொண்டு வாகனம் சேதப்படுத்தப்பட்டன.

    இந்த நிலைமை தமிழக ஜனநாயகத்தின் ஒரு சிக்கலான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் அரசியல் விழிப்புணர்வு மிக அதிகம் உள்ள ஒரு மாநிலம். மற்றொரு புறம் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

    இங்கே உண்மையான சோதனை வாக்காளர்களுக்குத்தான். ஒரு தேர்தலை ஒரு பரிவர்த்தனை போல ஆக்கிவிடுகின்றன அரசியல் கட்சிகளின் இந்த பணப்பட்டுவாடாக்கள்.

    விஜய் – தேர்தலை மாற்றிய காரணி

    இந்த தேர்தலின் மிக முக்கியமான மாற்றம் நடிகர் விஜய்யின் அரசியல் வரவு. தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியை தொடங்கி, இந்த தேர்தலில் விஜய் முழுமையாக களமிறங்கியுள்ளார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை மையமாக வைத்து அவர் அரசியல் செய்திகளை முன்வைத்துள்ளார். அவரது அரசியல் வரவு குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் இளைஞர் வாக்காளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இந்த வாக்காளர் பகுதியை தங்களின் ஆதரவாக மாற்ற வேண்டும் என்பதே தவெக-வின் முக்கிய இலக்காக பார்க்கப்படுகிறது.பல இடங்களில் நடந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை விட ரசிகர் விழாக்களைப் போலவே தோன்றியதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.ஆனால் அந்த உற்சாகம் உண்மையான வாக்குகளாக மாறுமா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.

    தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் புதிதல்ல.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சினிமா புகழை அரசியல் சக்தியாக மாற்றியவர்கள். ஆனால் இன்று அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது. சமூக ஊடகங்கள், பல கட்சிகள், அதிகமான அரசியல் போட்டி — இவை அனைத்தும் தேர்தலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றியுள்ளன.இருப்பினும் விஜய்க்கு இருக்கும் ரசிகர் ஆதரவை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

    பல ஆண்டுகளாக அவரது ரசிகர் மன்றங்கள் அமைப்புசார்ந்த வலையமைப்பாக உருவாகியுள்ளன. அவை தேர்தல் அரசியலிலும் பங்கேற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன.

    ஆனால் விமர்சகர்கள் கூறுவது வேறு. சில இளைஞர்களின் ஆதரவு அரசியல் மதிப்பீட்டின் அடிப்படையில் அல்லாமல் உணர்ச்சி அடிப்படையில் இருக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது, சிலருக்கு இது கொள்கை அரசியல் அல்ல — அடையாள அரசியல்.இதுவே இந்த தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான அரசியல் பரிசோதனையாக மாறியுள்ளது.

    யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை?

    ஒரு கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் சிறிய அளவிலான வாக்கு மாற்றமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய்யின் அரசியல் வரவு இரு பெரிய திராவிட கட்சிகளுக்கும் ஒரு புதிய கணக்கை உருவாக்கியுள்ளது.

    முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களிடம் அவருக்கு இருக்கும் ஆதரவு சில பாரம்பரிய வாக்கு வங்கிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    சில தொகுதிகளில் வெற்றி-தோல்வி இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும். அப்போது சில ஆயிரம் வாக்குகள் கூட முடிவை மாற்றக்கூடும்.

    அதனால் தான் பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது —விஜய் அதிக இடங்களை வெல்லாமல் இருந்தாலும் கூட, தேர்தல் முடிவை பாதிக்கக்கூடிய சக்தியாக இருக்கலாம். இந்த சாத்தியக்கூறே முக்கிய கட்சிகளில் ஒரு அளவுக்கு கவலையையும் உருவாக்கியிருக்கிறது.

    இறுதி முடிவு யாரிடம்?

    பிரசாரம் முடிந்த பிறகு தொலைக்காட்சி விவாதங்கள், சமூக ஊடக கணிப்புகள், அரசியல் கணக்குகள் — இவை அனைத்தும் அதிகமாகிவிடும். ஆனால் தேர்தல்களின் வரலாறு ஒரு உண்மையை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

    தேர்தல் முடிவுகள் மேடைகளில் தீர்மானிக்கப்படுவதில்லை.அவை வாக்குச்சாவடிகளில் தீர்மானிக்கப்படுகின்றன.

    ஒரு கூட்டத்திற்கும் செல்லாத வாக்காளர். அனைத்து வாக்குறுதிகளையும் அமைதியாக கேட்ட பெண் வாக்காளர். ஒரு தலைவரை விரும்பியிருந்தாலும் மற்ற காரணிகளை நினைத்துப் பார்த்த இளைஞர்.

    இந்த மௌன வாக்காளர்களே உண்மையான சக்தி. அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யலாம். வாக்குறுதிகள் வழங்கலாம். சமூக ஊடகங்களில் விவாதிக்கலாம்.

    ஆனால் இறுதியில் ஒரு வாக்குச்சாவடிக்குள் நுழையும் அந்த தருணத்தில், ஜனநாயகம் மிகவும் தனிப்பட்ட முடிவாக மாறுகிறது.

    அங்கு மைக் இல்லை. கோஷம் இல்லை. கூட்டம் இல்லை. ஒரு வாக்காளர் மட்டுமே இருப்பார். ஒரு வாக்கு இயந்திரம் இருக்கும். ஒரு தீர்மானம் இருக்கும்.

    அந்த தருணத்தில் —தமிழக அரசியலில் மிகச் சத்தமாக ஒலிக்கும் குரல், அந்த மௌன வாக்காளருடையதே.

    – பா. முகிலன்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநயன்தாரா – சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!. பூஜை வீடியோ வெளியீடு!.
    Next Article “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.
    Editor TN Talks

    Related Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    June 10, 2026

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    June 10, 2026

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவர் ஒரு குழந்தை மாதிரி… பாரதிராஜா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

    மேற்காசியாவில் பதற்றம் உச்சம்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்..!! மீண்டும் எச்சரிக்கை..!!

    பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார் பிரதமர் மோடி..!! இந்தியாவின் வெளியுறவு உறவுகளுக்கு புதிய உத்வேகம்..!!

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.