Close Menu
    What's Hot

    இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் தீ விபத்து – நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் தகவல்!

    இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அடித்து கொடுமை!. முதல் கணவர் குறித்து தங்க மங்கை ஷர்மிளா கண்ணீர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“காயிதேமில்லத் பெயரில் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும்”!. திருமாவளவன்!
    Featured

    “காயிதேமில்லத் பெயரில் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும்”!. திருமாவளவன்!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Thirumavalavan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காயிதேமில்லத் பெயரிலும் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 5. கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

    கண்ணியத்தமிழர் காயிதேமில்லத் அவர்கள் இந்திய அரசமைப்புப் பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர். மேலவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியாற்றியவர். அதன்மூலம் தேசியத் தலைவராக உயர்ந்தவர்.

    இஸ்லாம் எனது மதம்: தமிழ் எனது தாய்மொழி என முழங்கிய காயிதேமில்லத் அவர்கள் அன்னைதமிழ் மீதும் ஆருயிர்த் தமிழினத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். இசுலாமியர்களுக்கும் இன்னபிற சமூகத்தினருக்கும் இடையில் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்தவர். தமிழ்நாடு இன்று மதவெறி அரசியலுக்கு இடம்கொடுக்காத ஒரு சகோரத்துவ மண்ணாக விளங்குவதற்கு அவருடைய முதிர்ச்சிநிறைந்த பக்குவமான அரசியல் அணுகுமுறைகள் குறிப்பிடத்தகுந்த காரணமாகும். அத்தகைய மாமனிதர் காயிதேமில்லத் அவர்களின் மகத்தானப் பங்களிப்பைப் போற்றும் வகையில்தமிழ்நாடு அரசு அவரது பெயரில் விருது வழங்கிட முன்வரவேண்டுமென அவரது பிறந்தநாளான இந்நாளில் வேண்டுகோள் விடுக்கிறோம்!

    ஏற்கனவே தமிழ்நாடு அரசு கலை, இலக்கியம் சமூகம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்த ஆளுமைகளுக்கு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, திருவள்ளுவர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்த்தென்றல் திருவிக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அதுபோல, சமூகநல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும் களமாடிய ஒப்பற்றத் தலைவர் காயிதேமில்லத் பெயரிலும் தமிழ்நாடு அரசு விருது வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
    Next Article ஜூன் 18-ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!! ஆளுநர் உரையுடன் தொடக்கம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    July 28, 2026

    எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் தீ விபத்து – நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் தகவல்!

    July 28, 2026

    இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அடித்து கொடுமை!. முதல் கணவர் குறித்து தங்க மங்கை ஷர்மிளா கண்ணீர்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

    எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் தீ விபத்து – நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் தகவல்!

    இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அடித்து கொடுமை!. முதல் கணவர் குறித்து தங்க மங்கை ஷர்மிளா கண்ணீர்!

    எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை

    கரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.