Close Menu
    What's Hot

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»‘பெண்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவுபடுத்த தமிழகத்தில் மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்கள்’
    Featured

    ‘பெண்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவுபடுத்த தமிழகத்தில் மேலும் 2 டி.என்.ஏ. ஆய்வகங்கள்’

    Editor web2By Editor web2July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DNA lab
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கை விரைந்து விசாரிக்கவும், போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது உயர்நீதிமன்ற பதிவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக ஆறு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அத்துடன், சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் தற்போது டி.என்.ஏ. பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும், வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய மரபணு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

    விசாரணையின்போது நீதிபதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க உயர்நீதிமன்றத்தில் சிறப்பு குழு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டனர். மேலும், சிறப்பு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனைத்து வழக்குகளையும் தினசரி அடிப்படையில் விசாரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர்களே விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தனர்.

    அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    DNALab MadrasHighCourt Pocso tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சி : நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக போராட்டம்..! அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மை எ*ப்பு..!
    Next Article டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்; 3 மாதங்கள் சிறையிலடைக்க அதிகாரம்!
    Editor web2
    • Website

    Related Posts

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    July 24, 2026

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    July 24, 2026

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலி!

    மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் திடீர் ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்!

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: 47 என்.டி.ஏ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்?

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    இணைய சேவை இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ செயலிக்கு மத்திய அரசு தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.